வன்முறையை தூண்டும்படி பேசிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். அதில், ‘திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை’ எனக் கூறியிருந்தார்.
இவ்வாறு வன்முறை தூண்டும் வகையில் பேசிய எச்ராஜா வை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்ககோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த ஆணூர் ஜெகதீன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் " அவரது பேச்சால் தமிழகத்தில் பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தாகவும், அதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே அவர் தமிழத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறபிக்க வேண்டும் என்றும், அவரை குண்டர் தடுப்பு கைது செய்ய உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.