Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலணிகள் கொள்முதல் டென்டரை எதிர்த்து வழக்கு! - தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிலளிக்க உத்தரவு!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

Case against tender for purchase of shoes for government school students! - Tamil Nadu Textbook Corporation ordered to respond!

 

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலணிகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த மனுவுக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில், நடப்பு 2020-21ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான காலணிகள் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு பாடநூல் கழகம், கடந்த மார்ச் மாதம் டெண்டர் கோரியது.

 

இந்த டெண்டருக்குத் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், எந்தக் காரணமும் தெரிவிக்காமல் தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, ஹரியானாவைச் சேர்ந்த ‘பி என் ஜி பேஷன் கியர்ஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, குறைந்த தொகையைக் குறிப்பிட்டிருந்த தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து விட்டு, பேட்டா நிறுவனத்துக்கும், பவர்டெக் எலெக்ட்ரோ இன்ப்ரா என்ற நிறுவனத்துக்கும் பணிகள் வழங்க இருப்பதாகவும், அதற்குத் தடை விதித்து, தங்களுக்கு டெண்டர் ஒதுக்க வேண்டும் என்றும் மனுதாரர் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்