Skip to main content

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வழக்கு!

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

 case against the secretary of the Tamil Nadu teacher examination board

 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் 2012-2016 காலகட்டத்தில் கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளிலிருந்த போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராமேஸ்வர முருகனின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு எனப் பல இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாகச் சோதனை நடத்தினர். 

 

இந்த சோதனையில் ராமேஸ்வர முருகன், மனைவி அகிலா, தந்தை பழனிசாமி, தாய் மங்கையர்க்கரசி, மாமனார் அறிவுடைநம்பி, மாமியார் ஆனந்தி உள்ளிட்டவர்களின் பெயர்களில் ஏகப்பட்ட சொத்துக்கள் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ராமேஸ்வர முருகனிடம் ரூ.1,98,10,000 மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டியில் அந்த சொத்துமதிப்பு ரூ.6,52,52,000 ஆக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக 354 சதவீதம் சொத்துகளை குவித்தற்காக ராமேஸ்வர முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்