அரசு மருத்துவமனையில் உடல்களை எடுத்து செல்ல போதிய அமரர் ஊர்திகள் இல்லை: மக்கள் புகார்!
கோவை சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் இருதய பிரச்சணை காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல இலவச அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும் ஆம்புலன்ஸ் ஒட்டுநர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் போதிய அமரர் ஊர்திகள் இயக்கப்படுவதில்லை எனவும், ஒரே வாகனத்தில் மூன்று, நான்கு உடல்களை ஒன்றாக வைத்து இயக்கப்படுவதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து செல்வத்தின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. அண்மையில் ஒரே வாகனத்தில் மூன்று உடல்களை ஒரே அமரர் ஊர்தியில் எடுத்து சென்றதாக புகார் எழுந்த நிலையில், மீண்டும் போதிய அமரர் ஊர்திகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
-அருள்