Published on 12/10/2022 | Edited on 12/10/2022
கிருஷ்ணகிரியில் வாழைத் தோப்புக்குள் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ராமர்கோட்டாய் கிராமத்தை ஒட்டி உள்ள சாமுண்டீஸ்வரி வனப்பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த ரகசிய புகாரை அடுத்து அங்கு சென்ற நாகரசம்பட்டி போலீசார் சோதனை செய்து பார்க்கையில் அங்கு கோவிந்தசாமி என்பவரின் வாழை தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா பயிரிடப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து கஞ்சா பயிரிட்ட பழனி, சக்திவேல் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.