Skip to main content

படகில் கஞ்சா... யூடியூபர் வீட்டில் சுங்கத்துறை சோதனை!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

Cannabis in the boat .. Customs check on YouTuber home!

 

கடந்த 28 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் நாகை துறைமுகம், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கண்காணித்து வந்தனர். அப்போது நாகை துறைமுகம் அருகே ஒரு படகில் கஞ்சா மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருப்பதாகத் தகவல் கிடைக்க உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்துள்ளனர். அதிகாரிகள் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், கஞ்சாவைப் படகிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

இதையடுத்து, படகைச் சுற்றி வளைத்த சுங்கத்துறை அதிகாரிகள் படகிலிருந்த 280 கிலோ கஞ்சா அடங்கிய 10 மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அதோடு கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 4 இருசக்கர வாகனங்கள், இரண்டு வலைகள், ஒரு ஐஸ் பெட்டி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு, கடல் மற்றும் கடல் சார்ந்த உணவு உள்ளிட்டவற்றை மையமாக வைத்து யூ-டியூப் சேனல் நடத்தும் 'நாகை மீனவன்' குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Cannabis in the boat .. Customs check on YouTuber home!

 

இந்நிலையில் யூ-டியூப் சேனல் நடத்தி வந்த குணசீலன் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இன்று ஈச்சங்குப்பம் பகுதியில் உள்ள குணசீலன் அவரது நண்பர்கள் ரவி, சிவசந்திரன் ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் சோதனை மேற்கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்