ஆகஸ்ட் 26ம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து
சென்னையில் வரும் 26ம் தேதி தமிழ் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:
வரும் ஆகஸ்ட் 26ம் தேதி (சனிக்கிழமை) தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குனர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்கள் சங்கத்தின் 50ம் ஆண்டு பொன்விழா, சென்னையில் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினம் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்யுமாறு ஸ்டன்ட் யூனியன் சார்பில் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் வரும் 26ம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.