Skip to main content

கனரா வங்கியிடம் 6 கோடி ஏமாற்றிய திருச்சி தொழில் அதிபர் மீது சி.பி.ஐ. வழக்கு! 

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

 

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தன்னுடைய சொந்த நிறுவனத்துக்கு 6 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்ததாக பெல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் உட்பட இருவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

ச்

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் ஹைடெக் என்ற நிறுவனம் பெல் நிறுவனத்திற்கு தன்னுடைய நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறி போலியான ஆவணங்களை தயார் செய்து, அதனை பன்படுத்தி துவாக்குடியில் உள்ள கனரா வங்கியில் சுமார் 6 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து பெல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் ஹைடெக் நிறுவனத்தின் பங்குதாரருமான மாணிக்கம் மற்றும் அவருடைய மனைவி மரகதம் மீது மதுரை மண்டல கனரா வங்கியின் மேலாளர் பரமசிவம் புகார் அளித்தார்.

 

அதனை தொடர்ந்து போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியை ஏமாற்றிய குற்றத்திற்காக இருவர் மீதும் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 

சார்ந்த செய்திகள்