தமிழகத்தில் நான்காம் கட்ட தளர்வுகளின்படி இன்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 400 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கு உத்தரவின் போதும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் 7ம் தேதி முதல் பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையே இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. பயணிகள் பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பாக அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினிகள் வழங்கப்பட்டது. மேலும் பயணிகள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்றும் கண்காணிக்கப்பட்டனர்.