Published on 06/07/2021 | Edited on 06/07/2021

அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி- ஜெயங்கொண்டம் இடையிலான பேருந்து சேவை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது கிராம மக்களின் கோரிக்கையை நினைவேற்றும் விதமாக அதே வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பேருந்தை தானே ஓட்டி சென்று பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார்.