பைக் மோதிய விபத்தில் சிறுவன் பலி
நெல்லை அருகே மாட்டுவண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுவன் பலியானான். கணவன், மனைவி, மகன் படுகாயமுற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ராமன்குடியை சேர்ந்தவர் பாஸ்கர் 45. இவரது மனைவி தில்லைபுஷ்பம் 36. மகன்கள் தில்லைஹரீஸ் 6, வன்னிமுத்து 4 ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தில்லைவனம்தோப்பு என்னுமிடத்திற்கு சென்றனர். பாஸ்கர் குடும்பத்தில் அனைவரும் குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு மாலையணிந்திருப்பதால் அங்கு நடந்த வழிபாட்டில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரவு ராமன்குடி திரும்பினர்.
இருட்டில் ரோட்டில் முன்னதாக சென்றுகொண்டிருந்த மாட்டுவண்டி தெரியாமல் அதன் சக்கரத்தில் மோதியது. இதில் பைக் தூக்கிவீசப்பட்டது. சிறுவன் தில்லை ஹரீஸ் சம்பவ இடத்திலேயே பலியானான். சிறுவன் வன்னிமுத்து மற்றும் பெற்றோர் காயமடைந்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.