ஐந்து நாள் அரசுமுறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்குத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கினார்.
சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’, கி.ராஜநாராயணன் எழுதிய 'along with sun', ராஜம் கிருஷ்ணனின் 'lamps in the whirpool', தி. ஜானகிராமனின் 'crimson hibiscus', நீல பத்மநாபன் எழுதிய ‘ஜெனரேஷன்’ ஆகிய நூல்களைக் குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.
முதலமைச்சர் பரிசாக வழங்கிய நூல்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப்பட்டவை ஆகும்.