கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அண்ணங்கோவில் மீன்பிடி இறக்கு தளத்தில் இருந்து அந்தமானுக்கு செல்ல தயாரக இருந்த படகில் உப்பு மூட்டைகளை ஏற்றியுள்ளனர் ஆனால் ஏற்றப்பட்டவை போதை பொருட்கள் என அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் கொடுத்தின் பேரில் சுங்கதுறை மற்றும் கடலோர கவால் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பரங்கிப்பேட்டை அண்ணங்கோவில் மீன்பிடி இறக்கு தளத்தில் இருந்து படகு ஒன்று அந்தமானுக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த படகில் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன. இதனை பார்த்த மீனவர்கள் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கடலூர் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற கடலூர் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் சங்கீதா,உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் போலீஸார் சென்று படகை நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் சிறுபாலைகுடி கிராமத்தைச் சேர்ந்த நீதி மன்னன் அவரது சகோதரர் துரைசெல்வத்திற்காக புதுச்சேரி சென்று பழைய படகு ஒன்றை வாங்கி, அந்த படகை நாகை மாவட்டத்தில் உள்ள பழையார் மீன்பிடி துறைமுகத்தில் பழுது நீக்கி படகு ஆடாமல் கடலில் செல்வதற்காக அந்த படகில் நேற்று காலை அண்ணங்கோவிலில் 10 டன் உப்பு மூட்டை மற்றும் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு அந்தமான் செல்வதாக தெரிய வந்தது.
இதனையொடுத்து கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் இதுகுறித்து கடலூர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரி நீதி மன்னன் உள்ளிட்ட படகில் இருந்த சிலரிடம் விசாரணை செய்தனர். பின்னர் படகில் இருந்த உப்புமூட்டையிலிருந்து உப்பு மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதனை செய்வதற்காக எடுத்துக்கொண்டு, நீதிமன்னனிடம் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அண்ணங்கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.