Skip to main content

"தாமரையை வைக்காமல் துடைப்பத்தை வைத்துள்ளனர்" - இல.கணேசன் விமர்சனம்

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

ஆட்சி பீடத்தில் டெல்லி மக்கள் தாமரையை வைக்காமல் துடைப்பத்தை வைத்துள்ளனர் என  தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

 

BJP TAMILNADU ILA.GANESAN

 

கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு  தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது.12.09 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 57 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 53.6 சதவீத வாக்குகளும், பாஜக 39.31  சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 4.10  சதவீத வாக்குகளும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவரும்,  தமிழக  பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் கூறியுள்ளதாவது, ராஜ்ஜிய லஷ்மி என்று கூறப்படும் ஆட்சி பீடத்தில் டெல்லி மக்கள் தாமரையை வைக்காமல் துடைப்பத்தை வைத்துள்ளனர். இது பாஜகவிற்கு பின்னடைவு என்று சொல்லமுடியாது. கடந்த தேர்தலோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கெஜ்ரிவால் அறிவித்த இலவச தேர்தல் திட்டங்களுக்கும் பாஜக அறிவித்த தேர்தல் திட்டங்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்றார். 

 
 

சார்ந்த செய்திகள்