புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன்.. மத்திய அரசு பேச்சு மற்றும் கருத்துரிமையை பறித்து வருகிறது. தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் முன்னெடுத்து வருகிறது.
பாஜக தேசிய செயலாளர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த விநாயகர் ஊர்வலத்தில் காவல்துறையையும் நீதிமன்றத்தையும் இழிவாக பேசியுள்ளது கண்டிக்க தக்கது. அவர் மீது உடனடியாக காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் மாணவியை கைது செய்து சிறைக்கு அனுப்பியது காவல் துறை. ஆனால் கலவரத்தை தூண்டும்விதாக பேசிய எச்.ராஜாவிடம் சமாதானம் செய்யும் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டரின் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்துக்களை தடுப்பதாவும் நானும் லஞ்சம் தருகிறேன் என்று பேசியதுடன் நீதிமன்றத்தையும் தரம் தாழ்ந்து பேசியுள்ள ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மின்சார தட்டுப்பாடே இல்லை என்று கூறுவது நகைப்புக்கு உரியது. நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகையின் நேற்றைய கருத்து என்பது அவர்கள் விடுதலையை காலதமதபடுத்தும் முயற்சியாகும். அதாவது மாநில அரசு போட்ட தீர்மானம் தாமதமாக கிடைத்தது என்று ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு சொல்கிறது. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் தீர்மானம் போட்ட அன்றே அனுப்பிவிட்டோம் என்கிறார் இதில் யார் சொல்வது பொய் என்பதை அமைச்சரும் தமிழக அரசும் விளக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருகிறது எனவே டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து போதிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைச்சாலையில் கைதிகளின் உல்லாச வாழ்க்கை குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்த அவர் கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு நாங்கள் மாதம் 5லட்ச ருபாய் வழங்க வேண்டும் ஆகையால் நீங்கள் பணத்தை கொடுத்துவிட்டு உல்லாசமாக இருங்கள் என்று கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் ஊழல் செய்து வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் அவருக்கு கட்சியின் உயர் பதவி அளித்து இருப்பது ஊழல் செய்தால் அவருக்கு பதவி என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அவர் மீது கை வைத்தால் அவர் மற்றவர்கள் தலையில் கைவைத்து விடுவார் என்று தான் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இறுதி போரின் போது மத்திய அரசு உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு உதவி செய்தது என்று ராஜபட்சே கூறியிருப்பது அகம்பாவத்தின் உச்ச கட்டம். போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஐநா விசாரணை நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் பின்பற்றிய டெண்டர் முறை தான் தற்போதும் பின்பற்ற படுகிறது என்றும் மேலும் சிங்கிள் டெண்டர் முறை திமுக ஆட்சியில் தான் இருந்தது என்றும் அதனால் அவர்கள் ஆட்சியில் தான் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் திமுக ஆட்சியில் ஊழல் நடந்தது என்றால் ஏன் இது நாள் வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போதைய தமிழக அரசில் முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளதால் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால்அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இனி ஒரு நொடியும் இந்த ஆட்சி தமிழகத்தில் நீடிக்க கூடாது என்றார்.