மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 7.5% இடஒதுக்கீடு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதம் ஏற்பட்டதால், தமிழக அரசு அதிரடியாக இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை வெளியிட்டது. இந்த நிலையில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தார்.
தற்போது, இந்தச் சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், முதல்வருக்குப் பல்வேறு தரப்பட்ட பிரிவினரும் நன்றி தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சியினர் முதல் கூட்டணிக் கட்சியினர் வரை பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாங்கள் எதிர்ப்புக்கு அஞ்சுவோர் அல்ல, எங்கள் வேல் பயமின்றி துள்ளி வரும்!" என்று தெரிவித்தார்.