அ.தி.மு.க.வில், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கடந்த 7-ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது அ.தி.மு.க தலைமை. அதனை அடுத்து, தற்போது அடுத்த கேள்வியும் எழுந்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணி தொடருமா என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தலைவர் எல்.முருகன், "மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை ஆதரித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தோம். அதேபோல அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றது" எனக் கூறினார். தேர்தல் கூட்டணி குறித்து ஏதேனும் பேசப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து நகர்ந்தார்.