Published on 16/11/2022 | Edited on 16/11/2022
சிவகாசி மாநகர பா.ஜ.க. சார்பில் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வைக் கண்டித்து சிவகாசி பேருந்து நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சிவகாசி மாநகர பா.ஜ.க. தலைவர் பாட்டக்குளம் பழனிசாமி தலைமையில் திமுக அரசுக்கு எதிராக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில்: தலையில் இடிதான் விழுந்தது! சொத்துவரி உயர்வால் சொத்தை விற்கும் நிலைமையே! திமுக அரசின் பால் விலை.. பாலில் விஷமாய் மாறியதே! மின்கட்டண உயர்வால் இருட்டில் வாழ்கிறார்கள் ஏழைகளே! எனக் கோஷங்கள் எழுப்பினார்கள்.