Published on 12/09/2019 | Edited on 12/09/2019
வரும் செப்டம்பர் 19 தேதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ஏ.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது. அட்லீயின் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் விஜய் மற்றும் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து வருகின்றனர். ஏற்கனவே இத்திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது.

இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்று ஏ.ஜி.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இத்திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்குளில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.