நீதியை எதிர்பார்த்தவர்களுக்கு உயர்நீதிமன்றம் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது: நீதிபதி தீபக் மிஸ்ரா
சென்னை உயர்நீதிமன்ற கட்டடத்தின் 125வது ஆண்டுவிழாவில் பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கை திறந்துவைத்தார், பின்னர் விழாவில் அவர் பேசியதாவது,
தமிழக நீதிமன்றங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நல்ல முன்னேற்றம் பெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பல சிறப்புமிக்க தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நீதியை எதிர்பார்த்தவர்களுக்கு உயர்நீதிமன்றம் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. நீதிபதிகள் வழக்கறிஞர்கள் இணைந்து செயல்பட்டால், நீதி விரைவாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள கலங்கரை விளக்கம் இருளைப் போக்கி நீதி ஒளியை வழங்குவதாக காட்டுகிறது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்தியாவில் மிகச்சிறந்த கட்டடம் என சென்னை உயர்நீதிமன்றம் போற்றப்படுகிறது. தமிழகத்தில் 419 புதிய நீதிமன்றங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

படங்கள்: ஸ்டாலின்