ப்ளஸ் 2 சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் கடந்த 13ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக நேற்றுமட்டும் ஆன்லைனில் 23 ஆயிரத்து 583 பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், இதில் 11 ஆயிரத்து 121 பேர் விண்ணப்பத்துக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டதாகவும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்து இருக்கிறது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இனிவரக்கூடிய நாட்களில் மாணவ-மாணவிகள் பலரும் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட அதிகரிக்கும் என்று உயர்கல்வித் துறை எதிபார்த்து இருக்கிறது.