பெங்களுருவில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிப்பு
பெங்களுருவில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர்கள் கிழித்து எறிந்தனர். புலிகேசி நகரில் சுதந்திர தினம், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
மொழி திணிப்பு சட்ட விரோதம் என கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமய்யா நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்திக்கு எதிராக போராட்டம் நடந்தி வந்த கன்னட ரக்ஷிட் வேதிகே அமைப்பு தமிழில் எழுதப்பட்டிருந்த பேனர்களை கிழித்தனர்.