Skip to main content

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்;438 கடைகள் மூடல்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Banned tobacco products confiscated; 438 shops closed

ஈரோடு மாவட்டத்தில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து  அபராதம் விதிகப்படுவதோடு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட  கலெக்டர்  ராஜகோபால் சுன்கரா எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில், புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது போன்ற தடை செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தால், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் கடை மூடப்பட அவசரத் தடையாணை பிறப்பிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட  கலெக்டர்   ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் மற்றும் 16 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினர் ரோடு ஒருங்கிணைந்து 5181 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 438 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.24,17,630- மதிப்பிலான சுமார் 2822.33 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.1905 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு குழு மூலமாக அழிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள புகை பொருட்கள் காவல்துறையின் மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கூலிப் மட்டும் 259 கடைகளில் சுமார் 456.605 கிலோ கண்டறியப்பட்டு (அதன் மதிப்பு சுமார் ரூ.3,72,204) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேற்படி, 438 பொருட்கள் விற்பனையாளர்கள் மீது ரூ.69,85,000- அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டு மாவட்ட  கலெக்டர்  உத்தரவின்படி 438 கடைகளும் மூடப்பட்டுள்ளன.  அதில் முதல் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் 306 நபர்களுக்கு தலா ரூ.25,000-ம் அபராதமும், இரண்டாவது முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 நபர்களுக்கு தலா ரூ.50,000-ம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

கழிவுநீர் கலந்த குடிநீர்; உயிரிழந்த 11 வயது சிறுவன்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
drinking water mixed with sewage; The deceased was an 11-year-old boy

சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை அபீத் காலனி பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததாக 11 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிறுவனின் சகோதரியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட தண்ணீரை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்ற வருகிறது. துர்நாற்றத்துடன் குடிநீர் வருவதாக ஏற்கனவே அந்த பகுதி மக்கள்  புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பணம் இரட்டிப்பு மோசடி;3 பேர் கைது

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Fraud by claiming to double money; 3 people arrested

பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி விவசாயியிடம் ரூ.20 லட்சம் ஏமாற்றி பெற்ற சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்தியூர் சின்னத்தம்பி பாளையம் அண்ணமார் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (54) அப்பகுதியில் மளிகை கடை, விவசாயம், செங்கல் சூளை வைத்துள்ளார். வருவாயின் அளவு சிறியதாக இருந்ததால் அதனை இரட்டிப்பாக்க எண்ணினார். அப்போது அவருக்கு மூர்த்தி, சேகர் என்ற இருவர் அறிமுகமாகினர். தாங்கள் அளிக்கும் பணத்தை போன்று இன்னொரு மடங்கு பணம் வழங்கப்படும் என்று முத்துசாமியிடம் உறுதியளித்து நம்பிக்கை ஏற்படுத்தினர்.

இதனை நம்பிய முத்துசாமி கடந்த 23 அதிகாலை 3:00 மணியளவில் ஈரோடு பேருந்து நிலையம் பூக்கடை அருகே ரூ.20 லட்சம் ரொக்கத்தை மூர்த்தி, சேகர் அறிமுகப்படுத்திய நபர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் ரூ.30 லட்சம் இருப்பதாக கூறி கொடுத்த சூட்கேசை வாங்கிக் கொண்டு அந்தியூர் சென்று முத்துசாமி அதனை திறந்து பார்த்துள்ளார். அதில் இருந்தது போலியான ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலி ரூபாய் நோட்டுகள் குறித்து மூர்த்தி, சேகரிடம் கேட்க முற்பட்டார். அப்போது அவர்கள் இருவரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு டவுன் போலீசில் முத்துசாமி புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ் (45), இவரது தாய் மாமாவான சாமிநாதன் (58), பிரபு (39) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ஒரு மாருதி ஆம்னி வேனை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கடந்த 2023ல் திருப்பூர் மாவட்டத்தில் இதே போன்று ரூபாய் நோட்டுகளை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மோசடி செய்தது தொடர்பாக ரமேஷ் மற்றும் சாமிநாதன் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.