Skip to main content

பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு புதிய விமான சேவை...!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

சேலத்தை அடுத்த காமலாபுரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் விமான போக்குவரத்து சேவை தொடங்கி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பகலில் ஒரே ஒருமுறை மட்டும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் விமான நிலைய மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடந்தது. விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

 

 banglore-pondicherry-flight-service

 



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி கூறுகையில், ''சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வெள்ளி உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், நெசவாளர்கள், கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்கு சேலத்தில் இருந்து புதிதாக பல்வேறு முக்கிய ஊர்களுக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

முதல்கட்டமாக, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு புதிதாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த புதிய சேவை தொடங்கப்படும். மறுமார்க்கத்தில் புதுச்சேரியில் இருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கும் விமானம் இயக்கப்படும்.

 



சேலத்தில் இருந்து திருப்பதி வழியாக ஹைதராபாத், சேலம் - கொச்சி, சேலம் - சென்னை - ஷீரடி, சேலம் - மங்களூரு - கோவா வழித்தடங்களிலும் விமான சேவைகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில், சேலம் விமான நிலையத்தை விவசாயிகள் பாதிக்காத வகையில் விரிவாக்கம் செய்வது, சேலம் - சென்னை வழித்தடத்தில் மாலை நேரங்களிலும் விமான சேவையைத் தொடங்குதல், கூடுதல் விமானங்கள் இயக்குதல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டு உள்ளன.

சார்ந்த செய்திகள்