Skip to main content

கடலூரில் புதிய வழித்தடத்தின் பேருந்துச் சேவையை ஐயப்பன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Ayyappan MLA inaugurated the bus service of the new route in Cuddalore

கடலூரிலிருந்து செல்லஞ்சேரி பகுதிக்குப் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், கடலூரிலிருந்து செல்லஞ்சேரிக்கு செல்வதற்கு ‘தடம் எண் 501’ கொண்ட விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்தைத்  துவக்கி வைத்தார்.

இந்தப் பேருந்து திருவந்திபுரம், பில்லாலி தொட்டி, வரக்கால்பட்டு, வெள்ளகேட், தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம் மற்றும் காரணப்பட்டு ஆகிய கிராமங்களின் வழியாகச் செல்லும். இந்தப் பேருந்து காலை மற்றும் மாலையில் 8  நடைகள் இயக்கப்படுகிறது. இந்தச் சேவை பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட கடலூர் மண்டல பொது மேலாளர் ராஜா, துணை பொது மேலாளர் வணிகம் ரகுராமன், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்