கடலூர் மாவட்டம், சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் நகர காவல் நிலையம் சார்பில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய காவல் ஆய்வாளர், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும் போதை பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறினார். பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடர்பான அறிவுரைகளளை வழங்கினார். பள்ளியின் துணை முதல்வர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றார்.
சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் கலந்துக் கொண்டு போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களிடம் எவ்வாறு அடிமைபடுத்தபடுகிறது. இதனால் குடும்பங்கள் கஷ்டப்படுவதை மாணவர்களை அழைத்து அவர்களின் வாழ்நிலையை அனைவர் மத்தியிலும் கூறினார்.
மேலும் மாணவர்களின் வாழ்விட பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெற்றால் 100 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வேண்டும்.தகவல் அளிப்பவர்களின். ரகசியம் பாதுகாக்கப்படும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.