Published on 09/12/2021 | Edited on 09/12/2021
ரயில்களில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது என பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று (09.12.2021) மாலை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. சென்னை கோட்ட ரயில்வே கமிஷனர் செந்தில் குமரேசன் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எளிதில் தீ பற்றக் கூடிய பட்டாசு, பெட்ரோல் போன்ற பொருட்கள் மற்றும் ரயில்களில் சிகரெட் பிடித்தால் ஏற்படும் ஆபத்து பற்றிய அவசியத்தை உணர்த்தும் விதமாக மேளம் அடித்து பாட்டுபாடி, ஆட்டம் ஆடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.