Skip to main content

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட எ.வ.வேலு

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

தமிழகம் முழுவதும் இந்த மாத இறுதியில் இரண்டு கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினருக்கு நடைபெறவுள்ளது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனித்தனி சின்னத்தில் மட்டும்மே போட்டியிட முடியும். ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடுபவர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடலாம்.

 

AV Velu released the list of local election candidates

 

இதில் ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கு போட்டியிட ஒவ்வொரு கட்சியிலும் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதில் சிக்கல் வந்தால் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அது எதிரொலிக்கும். இதனால் கட்சி தலைமைகள், இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் கட்சியினர் மாவட்ட அளவில் பேசி முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என திமுக, அதிமுக இரண்டு கட்சி தலைமையும் முடிவு செய்து அறிவித்துவிட்டன. இதனை தொடர்ந்து இரண்டு கட்சியிலும் கூட்டணி கட்சியினருடன், இடங்கள் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் இடபங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக இடங்களை பிரித்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 14ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த திருவண்ணாமலை தெற்கு மா.செவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எம்.ஏ, திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 மாவட்ட கவுன்சிலர் பதவிகளும், 18 ஒன்றியங்களில் மொத்தம் 341 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளும் உள்ளன. இதில் எங்களோடு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மாவட்ட கவுன்சிலருக்கு 5 இடத்திலும், ஒன்றிய கவுன்சிலருக்கு 17 இடத்திலும், விசிக 12 ஒன்றிய கவுன்சிலருக்கும், மதிமுக 6 ஒன்றிய கவுன்சிலருக்கான இடத்துக்கும், சி.பி.எம் 4 ஒன்றிய கவுன்சிலருக்கும் போட்டியிடுகின்றன. அவர்களுக்கான வார்டுகள் கேட்டு பெற்றுக்கொண்டார்கள். மீதியிடங்களில் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி தவிர மற்ற கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர் மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடவில்லை. எங்களுக்கு மாவட்ட கவுன்சிலர் தேவையில்லை, ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களே போதும் எனச்சொன்னதால் அவர்கள் கேட்டதுபோல் பிரித்துக்கொண்டோம் என்றார்.

அடிப்படையில் இந்த மாவட்டம் திமுகவின் கோட்டை. 8 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ளார்கள். போட்டியிடும் வார்டுகளில் பெரும்பான்மையாக எங்கள் கூட்டணி வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவி மற்றும் மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றிய குழு தலைவர் பதவிகளை எங்கள் கூட்டணி கைப்பற்றும்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் கிராமங்கள் சீரழிவை சந்தித்தது, நடைபெறும் அதிமுக அரசால் நடைபெற்ற சீர்கேடுகள் குறித்து விளக்குவதோடு, திமுகவினர் வெற்றி பெற்றால் செய்யும் பணிகள் குறித்தும் மக்களிடம் விளக்கி தேர்தலை சந்திப்போம் என்றார்.

பின்னர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம், போளுர், ஜம்னாமத்தூர் ஒன்றியங்களில் திமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு போட்டியிடுபவர்களின் பட்டியலை வெளியிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்