இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டுமென மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மதுரை ஆதீனம், ''திராவிடம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கின்றனர். இன்றைய தினம் சர்ச் சொத்தில் அரசு தலையிடுவதில்லை, மசூதியின் சொத்தில் அரசு தலையிடுவதில்லை. ஆனால் நம்முடைய திருக்கோவில் சொத்துக்கள் அவர்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறி வருகிறது. அறநிலையத்துறை எனும் அறமில்லாத துறையை கலைத்துவிட வேண்டும்.
கலைத்துவிட்டு ஒரு நீதிபதியை போட்டு அவர்களுக்கு கீழ் வழக்கறிஞர்களைப் போட்டு அதற்கு கீழ் ஊர் பெரிய மனிதர்களைப் போட்டு எங்களையும் கலந்துகொண்டு எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும். அப்படி ஒரு நிலைமை வரவேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் உண்டியலில் காசு போடக்கூடாது. கோயில் நிலத்தில் வாடகைக்கு இருந்துகொண்டு வாடகை கொடுக்காமல் யார் டிமிக்கி கொடுத்தாலும் சரி அடுத்த பிறவியில் அவர்களெல்லாம் வௌவாலாக பிறப்பார்கள். சாபம் விடுகிறேன் என்றால் வேறென்ன செய்வது''என்றார்.