கமலஹாசனை சந்திக்க சென்னை வந்தார் அரவிந்த் கேஜ்ரிவால்!
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் நடிகர் கமலஹாசனை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சந்திக்கவுள்ளார். இவர்களது சந்திப்பிற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை வந்திருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வரவேற்பதற்காக, கமல்ஹாசனின் மகள் விமான நிலையத்திற்கு நேரடியாக சென்றுள்ளார். இருவரின் சந்திப்பானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் குறித்து காரசாரமாக கருத்துக்களைப் பதிவிட்டுவரும் நடிகர் கமலஹாசன், சமீபத்தில் தனிக்கட்சி மூலம் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாகவும் தெரிவித்தார். மேலும், கேரள மாநிலம் சென்ற கமலஹாசன், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் சந்தித்தார். இந்த சந்திப்பு நட்புரீதியிலானது என பின்னர் கமலஹாசன் தெரிவித்திருந்தார்.
இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வரும் அரவிந்த கேஜ்ரிவால், நட்புரீதியாக தான் இந்த சந்திப்பு இருக்கும் என ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்: ஸ்டாலின்