Skip to main content

நலிந்தோருக்கு மருத்துவம், கல்வி உதவி நிதியாக 2 லட்சம் வழங்கிய கலைஞர்!

Published on 17/04/2018 | Edited on 17/04/2018
kalaignar


 
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, திமுக தலைவர் கலைஞர் 
தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு
நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக்
கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக
2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தகக்
கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து தலைவர் கலைஞர்
பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய
புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்
என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி
ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து
உதவித் தொகை வழங்கப்படுகிறது.

 

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 4 கோடியே 53 லட்சத்து
90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால்
2018, மார்ச் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும்
கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம்
மொத்தம் ரூ.2,00,000/- (இரண்டு லட்சம்) 16-4-2018 அன்று வழங்கினார்.

 

நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை
தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.
நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ. 4 கோடியே 53 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.


2012 சூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும்
2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று ரூ.2,00,000/- தலைவர் கலைஞர் வழங்கினார்.

 


கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நிதி உதவி பெறுவோர் விவரம் ரூபாய்
1 . சி.பூபதி, கொடமாண்டப்பட்டி கூட்ரோடு, அந்தேரிப்பட்டி அஞ்சல்,
 மத்தூர் ஒன்றியம், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் - 25,000/-
2 . வெ.நாராயணசாமி, லஜபதிராய் வீதி, ராம் நகர், கோவை-641 009 - 25,000/-
3 . எம்.மும்தாஜ் பேகம், முஸ்லீம் தெரு, கோம்பை அஞ்சல்,
 உத்தமபாளையம், தேனி மாவட்டம் - 25,000/-
4 . பூ.சமயமுத்து, காமராசர் காலனி, திருப்பாச்சேத்தி,
 திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் - 25,000/-
5 . எம்.சக்கரைராஜன், 4வது தெரு, ஆசாரி காலனி,
 சாட்சியாபுரம், சிவகாசி மேற்கு, விருதுநகர் மாவட்டம் - 25,000/-
6 . எம்.முருகேசன், காந்திமதிநாதன் காம்பவுண்ட்,
 ஒட்டக்கூத்தர் தெரு, பாட்டபத்து, திருநெல்வேலி-627 006 - 25,000/-
7 . கே.தங்கம், கிருஷ்ணராஜபுரம் 8வது தெரு, தூத்துக்குடி-628 002 - 25,000/-
8 . வி.மகேந்திரன், மணல் மேட்டுத் தெரு, பேட்டை,
 திருநள்ளாறு, காரைக்கால்-609 607 - 25,000/-
 மொத்தம் ரூ. 2,00,000/-
 

சார்ந்த செய்திகள்