Skip to main content

‘டாக்டரை உடனே கைது பண்ணுங்க...’ - உடலை வாங்க மறுத்து உறவினர்கள், நண்பர்கள் போராட்டம்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

 'Arrest the doctor...'- Relatives are protesting against buying the body

 

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு ஏற்கனவே பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாக கடந்த எட்டாம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இன்று (15.11.2022) காலை சரியாக 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

 

 'Arrest the doctor...'- Relatives are protesting against buying the body

 

உயிரிழந்த பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என பெரவள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது வீராங்கனையின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து பிரியாவின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடல் வைக்கப்பட்டுள்ள வாகனத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீசார் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்களைக் கைது செய்யாமல் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்