Skip to main content

சர்ச்சை பதிவு; அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

arjun sampath twitter issue covai police

 

பொது மேடைகளில் பேசும் போதும் , சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது புதிதாக ஒரு வழக்கை கோவை போலீசார் பதிவு செய்துள்ளனர். சட்டமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும்  அனுசரிக்கப்பட்ட நிலையில்,  கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து இருந்தது சர்ச்சையான நிலையில், போஸ்டரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள், அர்ஜுன் சம்பத்தின் ட்விட்டர் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

arjun sampath twitter issue covai police

அர்ஜுன் சம்பத், பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவானது, அயோத்தியில் பாபர் மசூதி  இடித்ததைக் கொண்டாடும்  வகையிலும் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும்  உள்நோக்கம் உள்ளதாகவும்  அந்தப் பதிவு இருந்தது. மேலும் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் தடா ஜெ ரஹீம் என்பவரும் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்.

 

சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை பதிவிட்ட அர்ஜுன் சம்பத் மற்றும் தடா ஜெ ரஹீம் ஆகிய  இருவர் மீதும், இரு பிரிவின் கீழ்  கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்