Skip to main content

மருத்துவக் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவன்... 18 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

ariyalur district keezkavattangkurichi government school student got medical seat

 

 

தமிழக முதல்வரின் மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் எம்.பி.பி.எஸ். மாணவன் தேர்வாகியுள்ளது அப்பள்ளி ஆசிரியர்களும் அப்பகுதியினருக்கும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளி 1963ல் துவங்கப்பட்டது. பின் 2002ல் இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த ரதிவாணன் எனும் மாணவன் தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத மருத்துவப்படிப்புக்கான இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வாகியுள்ளார். 

 

ariyalur district keezkavattangkurichi government school student got medical seat
                                                      ரதிவாணன்


ரதிவாணனின் தந்தை சாமிநாதன் (52). இவரது சொந்த ஊர் கரைவெட்டி பரதூர் கிராமம். அங்கு 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வரும் சராசரி குடும்பம் இவர்களுடையது. ரதிவாணனுக்கு ஒரு சகோதரரும் இரண்டு சோகதிரிகளும் உள்ளனர். அவர்களில் சகோதரி ஒருவர் பி.எஸ்.ஸி. கணிதமும், இன்னொருவர் டி.ஃபார்மும் படித்துள்ளனர். சகோதரர் ஒருவர் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 

2002ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு 18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர் ஒருவர், மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளது அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அப்பகுதியினருக்கும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

ரதிவாணனை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, நேரில் அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து  பாராட்டினார்.

 

 

சார்ந்த செய்திகள்