அரியலூர் மாவட்டத்தில் இயற்கை வாழ்வியல் பாரம்பரிய உணவு இவற்றை தனது 3 வயதிலிருந்தே பல பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுத்து வரும் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சியில் வசித்து வரும் மாணவி அக்சயா. இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது தாயார் சசிகலாவிடம் தயிரின் தன்மை புளிப்பு என கருதி பலரும் சாப்பிடத் தயங்குகின்றனர். எனவே என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது, 5 ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவி அக்சயாவிற்கு ஒரு ஐடியா வந்தது. அது என்னவென்று அவரிடம் கேட்டபோது, நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கும் வகையில் அன்றாடம் என்னுடைய அம்மா சுசிகலா பசும்பாலில் மஞ்சள் தூள் போட்டு காய்ச்சிக் கொடுப்பது வழக்கம். மஞ்சள் தூள் போட்டு காய்ச்சிய பாலை தயிராக ஏன் மாற்றக் கூடாது என யோசித்தேன்.
எனது தாயாரிடம் இந்த ஐடியாவைச் சொன்னேன். அப்ப வந்தது தான் நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கும் மஞ்சள் தயிர். இதை நாங்க பழைய சோற்றுக்கும் பயன்படுத்தி வருகிறோம். சுவையும் அலாதியாக இருக்கு. வைரஸிலிருந்து காக்க உதவும் இந்த மஞ்சள் கலந்த தயிர்’’என்கிறார் அக்சயா.
5 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சொன்னது எளிமையானதும் நலம் தருவதாகவும் இருப்பதில் அக்கிராம மக்கள் நெகிழ்ந்து போகிறார்கள்.