Skip to main content

அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல்...!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

 

ee

 


இன்று காலை முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வரும் ஜனவரி 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற்றது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்தக் கூட்டத்தில் புதிதாக 11 தொழிற்சாலைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வானூர்தி உதிரிபாக உற்பத்தி கொள்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாநில மகளிர் கொள்கை; தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Tamil Nadu cabinet approves state women  policy

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குத் தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்க வழிவகை செய்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பன போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய மாநில மகளிர் கொள்கைக்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் ஆளுநர் உரை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

கேரள அமைச்சரவையில் மாற்றம்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Kerala cabinet reshuffle

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். இந்நிலையில், கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜு,  துறைமுகங்கள்  துறை அமைச்சர் அஹமது தேவர்கோவில் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதற்கான கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு பதிலாக கே.பி.கணேஷ் குமார் மற்றும் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக டிசம்பர் 29ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.