வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கே கரையைக் கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மதியம் முதலே காற்றுடன் மழை பெய்துவருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாலை முதல் சென்னையில் சூறைக்காற்றுடன் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நாளை புறநகர் ரயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாளை மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் 10 நிமிடத்துக்கு ஒரு முறை இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.