Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி!

Published on 01/03/2020 | Edited on 01/03/2020

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சங்கம் சார்பில் மாணவியருக்கான தற்காப்பு பயிற்சி நிகழ்ச்சி வேளாண்புலத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்புல முதல்வர் மணிவண்ணன், தலைமை தாங்கி பேசுகையில், "பெண்கள் அடிப்படையான தற்காப்பு யுத்திகளை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்பரம் கிளைச் செயலாளர் நடராஜன் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார். இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஐயப்பராஜா அனைவரையும் வரவேற்றார். வேளாண்புல பேராசிரியர் விஜயப்பிரியா மாணவியர் தங்களை சமூக விரோதிகளிடம் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார். 
 

இந்நிகழ்வில் அகில இந்திய டேக்வாண்டோ வாரியத்தின் தமிழ்நாடு கிளையின் இணைச் செயலாளரும் டேக்வாண்டோ மாஸ்டருமான அசோக்குமார் கலந்து கொண்டு மாணவியருக்கு தற்காப்பு கலை யுக்திகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். இதில் வேளாண் புலத்தினைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவியர் கலந்து கொண்டு தற்காப்பு கலைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்த திட்ட அலுவலர் சிவராமன் செய்திருந்தார்.
 

சார்ந்த செய்திகள்