அண்ணாமலை பல்கலை கழக மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 21 வது நாளாக போராட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுடன் 21 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளை அரசே ஏற்று நடத்திட வேண்டும். அரசு கல்லூரிகளில் வசூலிப்பது போன்று கட்டணத்தை அமல்படுத்திக் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக கோரிக்கை முழக்க போராட்டம், தர்ணா, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், முற்றுகை. சென்னையில் உண்ணவிரதம் என்பது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் செவ்வாய் கிழமை 21 வது நாளாக மாணவர்கள் பல் மருத்துவக்கல்லூர் வளாகத்தில் உள்ள முத்தையா செட்டியார் சிலையை சுற்றி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
-காளிதாஸ்