அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் சார்பில், தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒருவார ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பின் துவக்க விழா நடைபெற்றது. இந்த ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பானது பிப் 10 முதல் 15 வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவை தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மின்னியல் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத்தலைவர் முனைவர் குழந்தைவேல் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் "தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், இம்மாதிரியான பயிற்சி வகுப்புகள் நடத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக பேசினார்."
இதனை தொடர்ந்து முனைவர் சிவசங்கர் பேசுகையில், இந்த பயிற்சி வகுப்பின் சாராம்சங்கள் குறித்தும் மற்றும் ஒரு வார பயிற்சி வகுப்பின் திட்ட தொகுப்பையும் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார். முன்னதாக மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் யமுனா வரவேற்றார். இவ்விழாவில் பொறியியல் புல முதல்வர் முனைவர் ரகுகாந்தன் கலந்துகொண்டு பேசுகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் கல்வி நுணுக்கங்களை கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உதவிப்பேராசிரியர் சரவணன், பயிற்சி வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் பேராசிரியர்களும், மாணவர்களும், பயிற்சி வகுப்பின் பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.