Published on 26/01/2019 | Edited on 26/01/2019

அண்ணாவின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 3ம் தேதி திமுக சார்பில் அமைதி பேரணி நடக்கும் என சென்னை மாவட்ட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதி பேரணியானது வாலாஜா சாலை அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் சென்று முடிவடையும். இந்த பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.