ஆஜராக இருந்த நபரை கொலை செய்ய பதுங்கி இருந்த 12 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த பங்களாவில் சுமார் 6 பேர்கள் கொண்ட கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொலையை நிகழ்த்துவதற்காக மேலும் 6 பேர் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருப்பதும் தெரிய வந்து, அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக 12 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் நண்பனின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்தவர்களைக் கொலை செய்யப் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்தவர்களைக் கொலை செய்வதற்காக ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்து பின்னர் போலீசில் பிடிபட்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.