Published on 24/05/2019 | Edited on 24/05/2019
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக தயாநிதி மாறன் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சாம் பால் போட்டியிட்டார்.இதில் தயாநிதி மாறன் 4 இலட்சத்து 48ஆயிரத்து 911வாக்குகள் பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவருமே டெபாசிட் இழந்துள்ளனர்.பாமக வேட்பாளர் 1இலட்சத்து 47ஆயிரத்து 391வாக்குகளும் , கமலின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர் 92ஆயிரத்து 249 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 30ஆயிரத்து 886 வாக்குகளும் பெற்றுள்ளனர். மேலும் மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 57.15 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார்.