Published on 24/04/2019 | Edited on 24/04/2019
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜின் ராஜ் வயது 28. இவர் 2017 பேட்ஜ் காவலர். இவர் நெல்லை மாவட்டத்தின் மணிமுத்தாறு 9-வது பட்டாலியனின் சேர்ந்த ஆயுதப்படையில் உள்ளார்.

இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள கோதையாறு லோயர் நீர்மின் திட்டம் பணியில் காவலர் பொறுப்பேற்று இருக்கிறார். இன்று தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக பேச்சிப்பாறை காவல்நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவலர் தற்கொலைக்கு இதுவரை என்ன காரணம் என தெரியவில்லை.