Skip to main content

ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ சம்மன்!

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ சம்மன்!

ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தகவல் வெளியான நிலையில் இன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், ரூ.3500 கோடி முதலீடு செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதித்துள்ளது. ஆனால், ரூ.600 கோடி வரையிலான திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க, நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.

இதில் நடந்த முறைகேடு தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, மே மாதம், சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின், ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. இன்று சம்மன்அனுப்பி அக்டோபர் 4-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என கார்த்தி சிதம்பரத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்