Published on 06/07/2019 | Edited on 06/07/2019
அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக சார்பில் மாநிலங்களவையில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது அதிமுக சார்பில் மாநிலங்களவையில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.


முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒருஇடம் ஒதுக்கப்பட, இரண்டு சீட்கள் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு இடத்திற்கான வேட்பாளர்களை அதிமுக தற்போது அறிவித்துள்ளது