Skip to main content

அதிமுக முன்னாள் பெண் எம்.எல்.ஏ. மரணம் –கண்டுக்கொள்ளாத நிர்வாகிகள்

Published on 06/08/2018 | Edited on 06/08/2018
kana


வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தொகுதி ( தற்போது இந்த தொகுதி கலைக்கப்பட்டு ஆம்பூர் தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது ) 2001 – 2006 காலக்கட்டத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர் கனகதாரா.


ஆசிரியராக இருந்து பின்னர் அதிமுக கட்சிக்கு வந்தவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை தனித்தொகுதியாக இருந்த பேரணாம்பட்டு தொகுதியில் நிறுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. வெற்றி பெற்று எம்.எல்.ஏவான இவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் கட்சிப்பணியாற்றி வந்தார்.  


2006க்கு பின் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அதன்பிறகும் கட்சிப்பணியாற்றி வந்தவர், பின்னர் படிப்படியாக கட்சியில் இவரை ஒதுக்க தொடங்கினார்கள். ஜெ. மறைந்த பிறகு  கட்சியினர் இவரை சுத்தமாக கண்டுக்கொள்ளவில்லை. எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. கனகதாராவுக்கு ரத்தக்கொதிப்பு, சுகர் போன்ற வியாதிகள் வந்துள்ளன. இதனால் தனது சகோதரி வீட்டில் தங்கியபடி சிகிச்சை பெற்றுவந்தார்.


இந்நிலையில் 76 வயதான கனகதாரா தனது நோய்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு தனது சகோதரி வீட்டில் உள்ள தனது அறையில் ஆகஸ்ட் 4ந்தேதி இரவு வந்து தங்கியுள்ளார். ஆகஸ்ட் 5ந்தேதி காலை அறையில் இருந்து அவர் வெளியில் வரவில்லை. கதவு தட்டியும் திறக்காததால் உடைத்துக்கொண்டு உள்ளேப்போய் பார்த்தபோது அவர் இறந்துப்போயிருப்பது தெரியவந்தது.


ஆகஸ்ட் 6ந்தேதி அவரது உடல் அடக்கம் என அறிவிக்கப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்சியினர் குறைந்தளவே வந்துள்ளனர். பெரும்பாலான நிர்வாகிகள் அவர் இறப்பை கண்டுக்கொள்ளக்கூடயில்லை என வருத்தப்பட்டனர் சீனியர் கட்சியினர். இதுவே அம்மா ( ஜெ ) உயிருடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என வேதனைப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு!!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

incident in vellore

 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள வேப்பூர் கிராமத்தில், மின்சாரம் தாக்கி விவசாயத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரும்பு தோட்டத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கிய விவசாயத் தொழிலாளியான ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மின்சார வேலியில் தொழிலாளி ஒருவர் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று விலங்குகளுக்கு வைக்கப்படும் மின்சார வேலியில் சிக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்வதால் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

 

Next Story

குடியாத்தம், திருவெற்றியூருக்கு இடைத்தேர்தல்...? விரைவில் அறிவிப்பு!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020
 Gudiyatham, Thiruvetriyoor by-election ...? Announcement soon!

 

 

தமிழகத்தில் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏக்கள் காலமானதால் கடந்த ஆறு மாதங்களாக காலியாக உள்ளது. இந்நிலையில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பீகார் சட்டமன்ற தேர்தலோடு நாட்டில் உள்ள 65 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றியும் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், விரைவில் தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஒருவேளை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் நவம்பர் 29-ஆம் தேதிக்கு முன்னதாக குடியாத்தம், திருவெற்றியூரில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.