அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கட்சியில் நீடித்து வந்த இரட்டை தலைமை பிரச்சனை முடிவுக்கு வந்ததையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாகவே கட்சியில் புது உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 13 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் அதற்கான பணிகளை எவ்வாறு செய்வது, பூத் கமிட்டி உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.