Skip to main content

அதிமுகவை உடைக்கும் செயலில் ஈடுபடுவதாக பாஜக மீது - விஜயதரணி குற்றச்சாட்டு

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
அதிமுகவை உடைக்கும் செயலில் ஈடுபடுவதாக பாஜக மீது - விஜயதரணி குற்றச்சாட்டு

சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை காங்கிரஸ் எம்,எல்.ஏ விஜயதரணி சந்தித்தார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டி.டி.வி. தினகரன் உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்றும், தினகரனது மாமியார் சந்தான லட்சுமி இறப்புக்கு துக்கம் விசாரித்ததாகவும்  கூறினார். கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள தினகரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அதிமுக மீது அச்சுறுத்தலையும், அழுத்தத்தையும் பாஜக திணித்து வருகிறது என்றும் அதிமுக கட்சி விவகாரங்களில் தலையிடுவதற்கு பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவை உடைக்கும் செயலில் ஈடுபடுவதாக பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார். 

சார்ந்த செய்திகள்