Published on 14/08/2021 | Edited on 14/08/2021
தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக நேற்று (13.08.2021) இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண்துறைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு பொது நிதிநிலை அறிக்கை சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்று கூடியது. இக்கூட்டத்தொடர் 13.08.2021 முதல் 21.08.2021 வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, பொது நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று, வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை கலைவாணர் அரங்கத்திற்கு வருகைதந்தனர். இதில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, தன் கழுத்தில் பச்சைத்துண்டு அணிந்துவந்தார்.